உபுண்டுவினுடைய நமது பணியானது மென்பொருள் சுதந்திரத்தினைப் பற்றிய தத்துவத்தினால் உந்தப்படுகிறது. மென்பொருள் தொழில்நுட்பத்தின் பயன்களை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று பரப்ப இத்தத்துவம் பயன்படும் என்பது நமது நம்பிக்கை. கட்டற்ற மென்பொருளும் திறந்த மென்பொருளும்

கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருட்களைக் கொண்டு, ஒரு இயங்கு தளத்தினையும், அனைத்து பயன்பாடுகளையும் வழங்க வல்ல செயலிகளையும், சமூகம் சார்ந்த முறையினால் உந்தப்பட்டு, உருவாக்க முற்படுகின்ற திட்டமே உபுண்டு. மென்பொருள் சுதந்திரம் குறித்த உபுண்டுவின் மையமான கொள்கைகளுக்கு மூலமாக இருக்கும் அம்சங்களாவன:

1) கணினியினைப் பயன்படுத்தக் கூடிய எவருக்கும் அவருடைய மென்பொருளை உரிமத்திற்கான கட்டணமெதுவும் செலுத்தாது எந்தவொரு காரணத்திற்காகவும் இயக்க, பிரதியெடுக்க, விநியோகிக்க, கற்க, பகிர்ந்து கொள்ள, மாற்ற மற்றும் மேம்படுத்தக் கூடிய சுதந்திரம் அளிக்கப் பட வேண்டும்

2) எந்தவொரு பயனரும் தாங்கள் விரும்பும் மொழியில் தமது மென்பொருளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.

3) இயலாமையொடு பணிபுரிகின்ற சூழலில் இருந்தாலும் கூட கணினியின் எந்தவொரு பயனருக்கும் மென்பொருளை பயன்படுதுகின்ற வாய்ப்புகளனைத்தும் வழங்கப்பட வேண்டும்.

எங்களது கொள்கை நாங்கள் தயாரிக்கும் மென்பொருட்களில் பிரதிபலிக்கப் படுவதோடு எங்களது வழங்கல்களிலும் சேர்க்கப்படுகின்றது. இதன் விளைவாக நாங்கள் விநியோகிக்கும் மென்பொருட்களின் உரிமங்கள் எங்களின் உபுண்டு உரிமக் கொள்கையோடு ஒப்பிடப்படுகின்றன.

தாங்கள் உபுண்டுவினை நிறுவும்போது நிறுவப்படுகிற அனைத்து மென்பொருட்களும் ஏறத்தாழ இக்கொள்கைகளை ஏற்றவையாய் இருக்கின்றன. தங்களுக்குத் தேவைப் படும் எந்தவொரு மென்பொருளும் இச்சுதந்திரங்களை வழங்கவல்லதாய் இருக்கும் பொருட்டு நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றோம். சில "இயக்கி" களின் விஷயத்தில் மட்டும் நாம் விதிவிலக்குகளை கடைபிடிக்கின்றோம். இவை நிறுவும் நிலையில் மட்டுமே கிடைக்கக்பெறுகின்றன. இவையின்றி பல கணினிகளில் உபுண்டுவினை முழுமையாக நிறுவ இயலாத நிலையுள்ளது. இவற்றை நாம் கட்டுப்படுத்துவதாய் வகைப் படுத்தி வைக்கின்றோம். தாங்கள் விரும்புகிற பட்சத்தில் இவற்றை சுலபமாக நீக்கிக் கொள்ளலாம்.

உபுண்டுவின் பாகங்கள் பகுதி தங்களுக்கு உபுண்டுவின் பாகங்களைப் பற்றி அறிய துணைப் புரியும்.

கட்டற்ற மென்பொருள்

உபுண்டுவினை பொருத்தமட்டில் கட்டற்ற மென்பொருள் என்பது விலையினைச் சாராது சுதந்திரத்தினோடு ஒத்து நிற்கிறது. ஆயினும் நாங்கள் உபுண்டுவிற்காக விலை கோரமாட்டோம் என்பதில் உறுதியாய் உள்ளோம். உபுண்டு இலவசமாகக் கிடைக்கும் என்பதைக் காட்டிலும், உபுண்டுவினை நிறுவி பயன்படுத்தக் கூடிய மக்களுக்கு மென்பொருள் சுதந்திரத்திற்குத் தேவையான உரிமங்கள் வழங்கப்படுகிறது என்பதே முக்கியமான விஷயமாகும். இச்சுதந்திரங்களே உபுண்டு குழுமத்தினை வளர்ச்சியடையச் செய்வதோடு, தமது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு உபுண்டுவினை மேம்படுத்தி புதிய நாடுகளுக்கும் புதிய நிறுவனங்களுக்கும் ஏற்றதாக்குகின்றது.

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் கட்டற்ற மென்பொருளுக்கான விளக்கத்தின்படி, கட்டற்ற மென்பொருட்களுக்கான முக்கிய சுதந்திரங்களாவன:

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டற்ற மென்பொருளானது தெளிவானதொரு சமூக இயக்கமாக செயல்பட்டு வருகிறது. பல கோடிக்கணக்கான வரிகளையுடைய நிரல்களையும் ஆவணங்களையும் தந்துள்ளது. துடிப்பு மிக்க இச்சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் உபுண்டு பெருமையடைகிறது. திறந்த மூலம்

திறந்த மூலம்

ஆங்கில வார்த்தையான "ப்ஃரீ" யிலுள்ள குழப்பத்தினை தவிர்க்க 1998 உருவாக்கப் பட்ட பதமே திறந்த மூலம் என்பதாகும். திறந்த மூல விளக்கத்திற்கேற்ப திறந்த மூல மென்பொருளினை திறந்த மூல முனைப்பானது விவரித்தது. வெற்றியினையும் பரவலான அங்கீகாரத்தினையும் திறந்த மூலம் தொடர்ந்து பெற்று வருகின்றது.

உபுண்டு தம்மை திறந்த மூலம் சார்புடையது எனக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றது. சிலர் கருதுவது போல் திறந்த மற்றும் கட்டற்ற மென்ப்பொருட்களை வெவ்வேறானதாகவும் ஒத்துப் போகாததாகவும் நாம் கருதவில்லை. தம்மை கட்டற்ற மென்பொருள் இயக்கத்தோடு இணைத்துக் கொள்ளும் நபர்களையும் திற்ந்த மூலத்தினோடு இணைத்துக் கொள்ளும் நபர்களையும் இரண்டுடனும் இணைத்துக் கொள்ளும் நபர்களையும் அங்கத்தினராய் கொள்வதில் உபுண்டு பெருமிதம் கொள்கிறது.

TamilTeam/UbuntuPhilosophy (last edited 2008-08-06 16:17:54 by localhost)