Tamil_Translation_Common_Guidelines
மொழி பெயர்ப்புக்கான பொதுவான விதிமுறைகள்
உபுண்டு லினக்ஸை தமிழில் மொழி பெயர்க்க பொதுவான விதி முறைகளை நாம் கடைபிடிப்பது குழுவின் ஒருங்கிணைப்புக்கு நல்லது.
(1) "உபுண்டு லினக்ஸ் 6.10 எட்ஜி எல்ப்ஃ" இயங்கு தளத்தை (Operating System) அடிப்படையாக கொள்ள வேண்டும். இந்த வெளியீட்டில் எளிய முறையில் தமிழ் வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன.
(2) https://launchpad.net/distros/ubuntu/edgy/+lang/ta
- பக்கத்திற்கு சென்று தங்களுக்கு பிடித்த கோப்பை தேர்ந்தெடுக்கவும்.
(3) https://wiki.ubuntu.com/TamilTeam/Tamil_Translation_Update பக்கத்தில் இந்த கோப்பு ஏற்கெனவே குறிப்பிடப் பட்டுள்ளதா என சோதிக்கவும். இல்லையானால் தாங்கள் இதை தமிழாக்கம் செய்யலாம். இந்த பக்கத்தை முறைப்படி திருத்துக. <உங்கள் பெயர்> கோப்பின் பெயர் - முழுவதும் மொழிபெயர்த்து முடிக்கத் திட்டமிட்டுள்ள தேதி என ஏற்கெனவே உள்ள பாணியில் உள்ளிடுக.
(4) பணி முடிந்ததும் இதை மேலேற்றலாம்.
(5) இந்தப் பணி பழகாதவர்கள் அதற்கு முன் என் பார்வைக்கு அதை அனுப்புவது நல்லது. அல்லது நீங்கள் யாரேனும் அதை பார்வையிட்டால் நல்லது என நினைத்தாலும் அதை அனுப்பலாம்.
(6) தமிழாக்கம் குறித்த உதவிக்கு முதலில் தமிழ் விகியை பார்க்கவும். இதற்கு இங்கிருந்து தொடுப்பு உள்ளது:
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். |
TamilTeam/Tamil_Translation_Common_Guidelines (last edited 2008-08-06 16:16:18 by localhost)